
இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

வெள்ளி, 12 நவம்பர், 2010
சிமோன், இராஜேஸ்வரி வாழ்க! - கவிஞர் கண கபிலன்
சிமோன், இராஜேஸ்வரி வாழ்க!
அற்புதமான பெண்மகள் கண்டேன்
விற்பனரான அவர்தம் கணவர்
குடும்ப விளக்கா? கோயில் தீபமா?
அடுப்படிக் கப்பால் உலகைக் காக்கும்
இலக்கிய மகளும், இலக்கண மகனும்
உலகியல் வாழ்வில் உன்னதம் கண்டவர்!
அறிவின் சுடராய் அமைந்த தோற்றம்
நெறியுடை வாழ்வில் நிற்கும் ஏற்றம்
வாசம் பழகத் துடிக்கும் பார்வை
நேசம் பயில உதிர்க்கும் சொற்கள்
தேசம் விட்டு தேசம் வந்தும்
ஆசைத் தமிழை அணுகும் ஆர்வம்
அமிழ்தாய்த் தமிழை அள்ளிப் பருகித்
தமிழ்போல் வாழ்வில் தாங்கி நிற்கிறார்
தமிழால் வளர்கிறார் தமிழை வளர்க்கிறார்!
கமழும் சந்தனக் காடே நெஞ்சம்
பூக்களுக் கேது புகழும் அறிமுகம்
நாக்கடிப் பாகப் பேசா நங்கை
எண்ணச் சிறப்பாம் இராஜேஸ்வரியார்
கண்ணெனும் கணவர் கண்ணியச் சிமோன்
அமைதியி;ன் உருவம் ஆண்மையின் வடிவம்
சுமைகளைத் தூக்கும் தூய உள்ளம்
பெருமைக் குரிய பெண்ணின் பின்னே
அரும்பொருள் சிறக்க அணியாய் மிளிர்கிறார்
இலட்சிய இணையாம் இவர்கள்
தலைவர் கர்த்தர் தழல்நிழல் தழைக்கவே!
கவிஞர் கண கபிலன் 27-12-2009
அற்புதமான பெண்மகள் கண்டேன்
விற்பனரான அவர்தம் கணவர்
குடும்ப விளக்கா? கோயில் தீபமா?
அடுப்படிக் கப்பால் உலகைக் காக்கும்
இலக்கிய மகளும், இலக்கண மகனும்
உலகியல் வாழ்வில் உன்னதம் கண்டவர்!
அறிவின் சுடராய் அமைந்த தோற்றம்
நெறியுடை வாழ்வில் நிற்கும் ஏற்றம்
வாசம் பழகத் துடிக்கும் பார்வை
நேசம் பயில உதிர்க்கும் சொற்கள்
தேசம் விட்டு தேசம் வந்தும்
ஆசைத் தமிழை அணுகும் ஆர்வம்
அமிழ்தாய்த் தமிழை அள்ளிப் பருகித்
தமிழ்போல் வாழ்வில் தாங்கி நிற்கிறார்
தமிழால் வளர்கிறார் தமிழை வளர்க்கிறார்!
கமழும் சந்தனக் காடே நெஞ்சம்
பூக்களுக் கேது புகழும் அறிமுகம்
நாக்கடிப் பாகப் பேசா நங்கை
எண்ணச் சிறப்பாம் இராஜேஸ்வரியார்
கண்ணெனும் கணவர் கண்ணியச் சிமோன்
அமைதியி;ன் உருவம் ஆண்மையின் வடிவம்
சுமைகளைத் தூக்கும் தூய உள்ளம்
பெருமைக் குரிய பெண்ணின் பின்னே
அரும்பொருள் சிறக்க அணியாய் மிளிர்கிறார்
இலட்சிய இணையாம் இவர்கள்
தலைவர் கர்த்தர் தழல்நிழல் தழைக்கவே!
கவிஞர் கண கபிலன் 27-12-2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக