
இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

ஞாயிறு, 21 நவம்பர், 2010
கவிஞர் கி.பாரதிதாசன்
பாதிவழி வந்து பறந்ததுமேன்? - நீதியோ?
மீதிவழி யானறியேன்! மீளாத் துயர்தந்து
சோதிவழி சென்றதுமேன் சொல்லு!
கம்பன் அழுகின்றான்! கன்னல் தமிழ்மகன்
செம்பொன் திருவடி சேர்ந்ததனால்! - அம்மம்மா!
நெஞ்சம் பொறுக்கலையே! நேயமொளிர் தேவனவன்
கொஞ்சம் பொறுக்கலையே கூர்ந்து!
இன்றுநான் பெற்றபுகழ்! ஈடிலா நற்றலைமை!
நின்றுநான் ஆள்வதும் நின்னருளே! - வன்பகையை
வென்றுநான் வாழ விரும்பி உழைத்தவுனை
என்றுநான் காண்பேன் இனி!
புன்னகை எங்கே? பொலியும் முகமெங்கே?
இன்னகை மின்னும் எழிலெங்கே? - நன்னுளம்முன்
பொன்னகை எங்கே? புலவன்நான் வாடுகிறேன்!
பன்னகை தாயே பகர்!
நீண்ட உருவம்!நேர் கொண்ட உயர்பார்வை!
ஆண்ட தமிழின் அழகுள்ளம்! - சான்றோர்போல்
தோண்ட சுரக்கும் சுடரறிவு! உள்ளுருகி
வேண்ட வருமா விரைந்து!
அன்பில் கனிந்த அருங்கனியே! செந்தமிழ்ப்
பண்பில் கனிந்த படருளமே! - வன்மையுடன்
துன்பில் புகுத்தி வெகுதூரம் போனதேன்?
என்றன் உறவை இழந்து!
பொன்னுடைந்து போகும்! பொருளுடைந்து போகும்!கூர்
வன்னுடைந்து போகும்! வளர்மதியே! - மென்கொடியே!
மண்ணுடைந்து போகும்! மரமுடைந்து போகும்!என்
கண்ணுடைந்து போனதே காண்!
வான்அழுத! வண்ண மலர்அழுத! துள்ளிவரும்
மான்அழுத! சூழ்ந்துள மண்ணழுத! - மீன்அழுத!
கான்அழுத! காற்றான கன்னித் தமிழழுத!
நான்அழுத! சென்றதேன் நாடு!
17.11.2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக