
இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

வெள்ளி, 3 டிசம்பர், 2010
பாரிசு பார்த்தசாரதி!

அமைதியான உருகொண்டு
அன்பான உளம்கொண்டு
இமைபோன்று செயல்கொண்டு
இனியதமிழ் நெறிகொண்டு
தமைத்தந்து தமிழ்காத்த
தனிப்புகழ்சேர் சிமோன்யூபர்ட்
நமைவிட்டுப் பிரிந்தாரே!
நம்முள்ளம் வாடுதம்மா!
காலங்கள் வென்றுநிற்கும்
கம்பனுக்கு உழைத்திட்டார்!
ஞாலம்உள வரையில்அவர்
நறும்பணிகள் நினைவிருக்கும்!
பலமான போர்த்துறையில்
பணியாற்றிச் செவாலியே
நலமான விருதுபெற்றார்!
நன்றேசீர் நிலைத்திருக்கும்!
போராடும் வாழ்வினிலே
புகழ்பெற்றார் மிகச்சிலரே!
தீராத தமிழ்ப்பற்றுச்
சிமோனும் அதில்ஒருவர்!
ஆராத துயர்பெருகும்
ஆறுதலும் ஏதய்யா?
ஊரே!நல் உறவே!நம்
உத்தமரின் பேர்காப்போம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக