இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்
சனி, 20 நவம்பர், 2010
கவிஞர் லினோதினி சண்முகநாதன்
அழிவினைக் காண்பதில்லை!
ஆறுபோல் பரந்து ஓடும்
அன்புள்ளம் கொண்ட ஐயா! - நின்
வீறுகொள் நடை தானெங்கே?
விரைந்து நீ சென்றதெங்கே?
காரிருள் சூழ்ந்து வானம்
கௌவிய இருளை நீக்கி
ஞாயிறைக் காணு முன்னே
ஞாலனே! மறைந்ததெங்கே?
அன்று நான் அரங்கிலேறி
ஆக்கிய தமிழ்ப் பாவெல்லாம்
மன்றிலே அமர்ந்து கேட்டு
மனமுவந்தாசி கூறிச்
சென்று வா என்றே - இருகரம்
சேர்த்தென்னை அனுப்பி வைத்தீர்!
சென்று நான் வந்தேனையா
செவாலியே! நீவீர் எங்கே?
இன்றும்மைப் பார்த்ததுபோல்
இளநகை புரியும் தோற்றம்!
நின்று என்னுள்ளத்துள்ளே
நீள்துயர் வளர்க்குதையா!
என்றினிக் காண்போம் என்றே
எண்ணிடும் போதில் நெஞ்சம்
கன்றினைப் போலே கதறிக்
கண்ணீரில் மூழ்குதையா!
அன்பிலே பிறந்த நெஞ்சம்
அன்பிலே வளர்ந்த நெஞ்சம்
அன்பையே அளித்த நெஞ்சம்
அழிவினைக் காண்பதில்லை!
என்பதால் இமையமே உம்மை - இனிக்
கண்களாற் காணோமெனினும், - எம்
கருத்திலே நிறைந்து என்றும்
எம்முடன் வாழ்கின்றீரே!
ஆறுபோல் பரந்து ஓடும்
அன்புள்ளம் கொண்ட ஐயா! - நின்
வீறுகொள் நடை தானெங்கே?
விரைந்து நீ சென்றதெங்கே?
காரிருள் சூழ்ந்து வானம்
கௌவிய இருளை நீக்கி
ஞாயிறைக் காணு முன்னே
ஞாலனே! மறைந்ததெங்கே?
அன்று நான் அரங்கிலேறி
ஆக்கிய தமிழ்ப் பாவெல்லாம்
மன்றிலே அமர்ந்து கேட்டு
மனமுவந்தாசி கூறிச்
சென்று வா என்றே - இருகரம்
சேர்த்தென்னை அனுப்பி வைத்தீர்!
சென்று நான் வந்தேனையா
செவாலியே! நீவீர் எங்கே?
இன்றும்மைப் பார்த்ததுபோல்
இளநகை புரியும் தோற்றம்!
நின்று என்னுள்ளத்துள்ளே
நீள்துயர் வளர்க்குதையா!
என்றினிக் காண்போம் என்றே
எண்ணிடும் போதில் நெஞ்சம்
கன்றினைப் போலே கதறிக்
கண்ணீரில் மூழ்குதையா!
அன்பிலே பிறந்த நெஞ்சம்
அன்பிலே வளர்ந்த நெஞ்சம்
அன்பையே அளித்த நெஞ்சம்
அழிவினைக் காண்பதில்லை!
என்பதால் இமையமே உம்மை - இனிக்
கண்களாற் காணோமெனினும், - எம்
கருத்திலே நிறைந்து என்றும்
எம்முடன் வாழ்கின்றீரே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக