வியாழன், 2 டிசம்பர், 2010

தணிகா சமரசம்

பாடுவோம் உன் புகழை!
 
கம்பனைத்தேடும் இடத்திலே
நம்பினேன் உன்னைத் துணையாக 
தும்பின நேரத்தில்  மறைந்தாயே!
விம்பினேன் காணாமல் உன்னை!

காந்த விழிகள் எங்கே 
சாந்தம் தவழும்  முகத்திலே!
மடிந்ததே ஞானப்புன்னகை
நனைந்ததே எங்கள் கண்கள் !

சாதி மல்லிகைப் புன்னகையில்
பாதி மட்டும் பூமியில் நிறுத்தி
நீதியைப் பற்றி எண்ணாமல்
மீதியை எடுத்துப் பறந்தாயே !

காடு மேடு பள்ளம் தாண்டி
இரவு பகல் தூக்கமின்றிப்
பெருமை சிறுமை பாராமல் 
உழைத்தாய்க் கம்பன் புகழ்ப்பாட!

தேவர் உலகிற்குச் சென்றபோதும்
போற்றிடுவோம் பூமியில் உன் செயலை!
காத்திடுவோம் உன் தமிழ்த் தொண்டை!
ஏற்றிடுவோம் உன் புகழ் விளக்கை!

0 உங்கள் எண்ணங்கள்: