இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்
வெள்ளி, 3 டிசம்பர், 2010
பெஞ்சமின் லெபோ
பொன்றாப் புகழில் ஒன்றிப் போனவர்
கண்ணில்நீர்! | என்றன் | கருத்தில்? | வேறியார்? |
விண்ணில் | குடிபுகுந் | தாலும் | நெஞ்சம் |
தன்னில் | நிலைத்துவிட்ட | சிமோன்ஐயா | அவர்களே! |
எண்ணிப் | பார்க்கிறேன் | ஏக்கத்துடன்! | அவர்தம் |
அணைப்பிலே | அன்பு | இருக்கும் | பாசப் |
பிணைப்பிலே | பரிவு | பதமாக | இறுக்கும்! |
பார்வையிலே | அருள்ஓளி | பிறக்கும் | பேச்சுக் |
கோர்வையிலே | கன்னித்தமிழ், | கன்னலாய்ச் | சிறக்கும்! |
நண்பனாய், | மந்திரியாய் | நல்லா | சிரியனுமாய்ப் |
பண்பிலே | தெய்வமாய்ப் | பார்வையிலே | சேவகனாய் |
எனக்கமைந்த | நண்பரை | இனிஎன்று | காண்பனோஎனக் |
குமைந்தழுது | கொண்டிருந்தேன் | குமுறிய | மனத்துடன். |
பதமான | கையொன்றுஎன் | முதுகைப் | பாசமுடன் |
இதமாகத் | தடவியது. | இடுங்கியஎன் | கண்முன்னால் |
குனித்த | புருவமும்; | செவ்வாயில் | குமிண்சிரிப்பும் |
பனித்த | சடையும் | பால்போல் | திருமுகமும் |
இனித்தமுடன் | என்னெதிரே | எம்பெருமான் | இயேசு! |
'என்னில் | விசுவாசம் | கொள்பவர் | இறப்பினும் |
என்றும் | வாழ்வார்" | என்றுநான் | உண்மையாய் |
அன்றே | உரைத்தேனே! | அறிவாயே | நீயே! |
உண்மையாய் | உண்மையாய் | உனக்குச் | சொல்லுகிறேன் |
நண்பர்சிமோன் | என்னில் | விசுவாசம் | கண்டார் |
விண்ணுலகில் | என்னோடு | இணைந்து | கொண்டார்! |
இன்னும் | உனக்குஏன் | வருத்தம்? | தேறுவாய்" |
என்றெனக்கு | இயேசு | சொல்லி | முடிக்குமுன் |
இன்னொருவர் | வந்துநின்றார் | இங்கே | பாரென்றார்! |
'வையத்துள் | வாழ்வாங்கு | வாழ்பவர் | வானுறையும் |
தெய்வத்துள் | வைக்கப்படுவார் | அல்லரா! | அப்பனே, |
கைக்கொண்ட | சோகத்தைக் | கைகழுவி | விடு"என |
மெய்ப்பொருளை | உணர்த்தியவர் | தெய்வப் | புலவரேதாம்! |
'சீரியதோர் | ஓட்டப் | பந்தயத்தில் | கலந்துகொண்ட |
நேரிய | நெஞ்சத்தவர் | சிமோன் | ஐயா |
சிறப்பாகப் | பந்தயத்தில் | வெற்றி | பெற்றார். |
முறையாகப் | பரிசுமுழுமை | யாகத் | தரவேண்டி |
இறைஅவரைத் | தம்மிடம் | அழைத்துக் | கொண்டார்! |
குறைஒன்றும் | இல்லை | கலங்காதே | வீணாகக் |
கவலாதே" | என்றவர் | பவுலடிகள் | எனவுணர்ந்தேன்! |
அவ்வளவில் | அடியேன் | அருகே | வந்தவர் |
அவ்வைப் | பாட்டியே! | 'அப்பா, | மகனே! |
ஆண்டாண்டு | தோறும் | அழுது | புரண்டாலும் |
மாண்டோர் | வருவரோ?" | அவ்வை | சொன்ன |
ஆறுதல் | கேட்டே | தேறுதல் | பெற்றேன். |
வேறியார் | வருவரோஎன | விருப்புடன் | நோக்க |
முறுக்கு | மீசை | முண்டாசுக் | கவிஞர் |
சரக்சரக் | கெனத் | தோன்றிக் | கூவினார்: |
'காலா | ஊனைச்சிறு | புல்லென | மதிக்கிறேன் |
காலருகே | வாடா | சற்றேஉனை | மிதிக்கிறேன். |
எங்கள் | சிமோனைக் | கவர்ந்ததெப்படி? | பார்க்கிறேன் ! |
இங்கே | வாடாஉன் | கணக்கைத் | தீர்க்கிறேன்!" |
குறுக்கே | புகுந்து | விரைந்தோடி | வந்தார் |
நறுக்கு | மீசைக் | கவிஞர் | பாவேந்தர் |
'தமிழுக்குத் | தொண்டு | செய்வோர் | சாவதில்லை |
தமிழ்த்தொண்டர் | சிமோன்தான் | இங்கே | செத்ததுண்டோ!" |
உளமாரக் | கவிஞர்தம் | உரைகேட்ட | காலனும் |
'களவாடிச் | செல்லவில்லை@ | கடும்பணிகள் | பலசெய்ய |
விண்ணுலகுக்கு | விருந்தினராய் | விரைந்தழைத் | துச்சென்றேன் |
மண்ணுலகில் | அவர்புகழ் | மங்கா | திருக்கும்" |
என்றுரைத்தான். | சரியென | ஏற்றேன். | நண்பர் |
என்றென்றும் | நம்மோடு | இருக்கின் | றாரே! |
பொன்றாதவர் | புகழென்று | புரிந்து | கொண்டனென்! |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக