திங்கள், 13 டிசம்பர், 2010

திருமதி. சிமோன் இராசேசுவரி

வாழ்க்கைச் சோகம்
 

மலரின் இதழ்கள் வாடி உதிர்வதும்
நிலவின் முழுமை நிலை குலைவதும்
முகிலின் உருவம் முற்றும் மறைவதும்
அகிலின் மணமும் அகன்று தேய்வதும்
பனித்துளி அழகு பனித்துடன் காய்வதும்
இனிப்பெனும் சுவையும் இனிமை குறைவதும்
வண்ணக் கனவு விடியலில் மறப்பதும்
எண்ணச் சிதறல் எளிதில் மாய்வதும்
என்னைத் துறந்து..நீ எங்கோ சென்றதும்
உன்னை மறவா(து) உள்ளம் துடிப்பதும்
இன்றும் தொடரும் ஏழையென் சோகம்!
என்றும் வாட்டும் இன்னுயிர் ஓட்டம்!
தன்னுயிர் இழக்கத் தனிவழி உளதோ?
என்மனம் அறிந்து இணைப்பார் இலையே!
முந்தைய நாளினில் முன்வந்து அணைத்த..நீ
சிந்தை மகிழ்ந்திடச் சீர்வழி கண்டே
உனதரும் பாவையை உனக்கென மீண்டும்
தனதாய்க் கொள்வாய் தரணியில் இருந்தே!


உன் ராஜி

0 உங்கள் எண்ணங்கள்: