
இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

சனி, 20 நவம்பர், 2010
கவிதைச்சித்தர் கண.கபிலனார்
இரங்கற்பா
இறப்பே! வாழ்வின் இறுதியே! பிறந்த
பிறப்பு தொடங்கிப் பெருகிடும் முடிவே!
எத்தனைப் பெயர்கள்! எத்தனை வடிவம்!
எத்தனை முகங்கள்! எண்ணில் அடங்குமா?
மரணமாம் இருட்டாய் மறைவாய்ப் பதுங்கித்
தருணம் பார்த்துத் தாவிக் குதிக்கிறாய்
ஈரம் இல்லை: இரக்கம் இல்லை
கோரம் மிகுந்த கொடுங்கரம் நீட்டி
மண்ணுயிர் யாவும் கவர்ந்து செல்கிறாய்
எண்ணிப் பார்க்கும் இதயம் இல்லையா?
உத்தமர்;: உயர்ந்த குணங்களின் இருப்பிடம்
மெத்தப் படித்தும் மிகுந்து நிற்கா
ஆன்று அவிந்து அடங்கிய உருவாம்
சான்றோர் வாழ்வைச் சாய்த்து விட்டனை,
உருக்கு போன்ற உடம்பும் உள்ளமும்
நொறுக்கிப் போட்டாய்: நெஞ்சு நடுங்குதே!
சிமோன் எனறதும் சிந்தை வருவது
அமைதி, அடக்கம், அன்பின் வழியே
அறிவும், நெஞ்சின் அழகும், பண்பும்
செறிந்த முகத்தை மறப்போம் இலையே!
என்ன புகல்வோம்? இராசே சுவரிக்கு ?
தன்னில் வாழ்ந்த தனிப்பெருஞ் சிறப்பை,
கண்ணைக் கருத்தைக் காவிய அழகை
அள்ளிக் கொடுத்த அருந்தமிழ்த் துணையை,
கொள்ளை கொடுத்தார்: கொடுமை கொடுமை
நேற்று இருந்தார், இன்று இல்லை.
மாற்றம் இல்லை மரணம் வரும்வழி
என்று எம்மைத் தேற்றுவோம் இலையே!
என்றும் உம்மை மறவோம், நண்பரே!
ஆய கலைகள் அணிந்த சோதரி!
தூயக் கண்ணீர் துடைத்திட இங்கே
ஆயிரம் கரங்கள் நீண்ட போதிலும்
நேயம் மறக்குமா? நெஞசம் ஆறுமா?
இப்படி இரங்கற் பாக்கள் பாடவா?
ஒப்பி எம்மை வைத்தாய், இறiவா!
கர்த்த ரானவர் கருணை வள்ளல்
அர்த்தம் அறிவார்: ஆறும் நெடுந்துயர்!
ஏசு பிரானே, இறையே!
மாசிலா மலர்ப்பதம் மங்கைக்(கு) இடுகவே
இறப்பே! வாழ்வின் இறுதியே! பிறந்த
பிறப்பு தொடங்கிப் பெருகிடும் முடிவே!
எத்தனைப் பெயர்கள்! எத்தனை வடிவம்!
எத்தனை முகங்கள்! எண்ணில் அடங்குமா?
மரணமாம் இருட்டாய் மறைவாய்ப் பதுங்கித்
தருணம் பார்த்துத் தாவிக் குதிக்கிறாய்
ஈரம் இல்லை: இரக்கம் இல்லை
கோரம் மிகுந்த கொடுங்கரம் நீட்டி
மண்ணுயிர் யாவும் கவர்ந்து செல்கிறாய்
எண்ணிப் பார்க்கும் இதயம் இல்லையா?
உத்தமர்;: உயர்ந்த குணங்களின் இருப்பிடம்
மெத்தப் படித்தும் மிகுந்து நிற்கா
ஆன்று அவிந்து அடங்கிய உருவாம்
சான்றோர் வாழ்வைச் சாய்த்து விட்டனை,
உருக்கு போன்ற உடம்பும் உள்ளமும்
நொறுக்கிப் போட்டாய்: நெஞ்சு நடுங்குதே!
சிமோன் எனறதும் சிந்தை வருவது
அமைதி, அடக்கம், அன்பின் வழியே
அறிவும், நெஞ்சின் அழகும், பண்பும்
செறிந்த முகத்தை மறப்போம் இலையே!
என்ன புகல்வோம்? இராசே சுவரிக்கு ?
தன்னில் வாழ்ந்த தனிப்பெருஞ் சிறப்பை,
கண்ணைக் கருத்தைக் காவிய அழகை
அள்ளிக் கொடுத்த அருந்தமிழ்த் துணையை,
கொள்ளை கொடுத்தார்: கொடுமை கொடுமை
நேற்று இருந்தார், இன்று இல்லை.
மாற்றம் இல்லை மரணம் வரும்வழி
என்று எம்மைத் தேற்றுவோம் இலையே!
என்றும் உம்மை மறவோம், நண்பரே!
ஆய கலைகள் அணிந்த சோதரி!
தூயக் கண்ணீர் துடைத்திட இங்கே
ஆயிரம் கரங்கள் நீண்ட போதிலும்
நேயம் மறக்குமா? நெஞசம் ஆறுமா?
இப்படி இரங்கற் பாக்கள் பாடவா?
ஒப்பி எம்மை வைத்தாய், இறiவா!
கர்த்த ரானவர் கருணை வள்ளல்
அர்த்தம் அறிவார்: ஆறும் நெடுந்துயர்!
ஏசு பிரானே, இறையே!
மாசிலா மலர்ப்பதம் மங்கைக்(கு) இடுகவே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக