
இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

ஞாயிறு, 12 டிசம்பர், 2010
கவிஞர் அருணா செல்வம்
உன்னிகர் ஆகுமா ?
(பஃறொடை வெண்பா)
இரங்கல் கவிதை எழுதிவரச் சொன்னார்!
கரங்கள் நடுங்கின! காகிதத்தைக் கண்டே!
இறந்தார் எனப்பலர் சொன்னாலும் நெஞ்சம்
மறந்தால்.. உருவம் மறைந்தால்.. எழுதிடலாம்!
கண்ணுக்குள் வந்து கவிதையாய் நிற்கிறார்!
பொன்னுக்குள் முத்தெனப் பூவாய்ப்; பொலிகிறார்!
விண்ணுக்குள் மின்னிடும் விண்மீனின் புன்னகையும்
மண்ணுக்குள் போனதாய் மற்றவர்கள் சொன்னதைப்
பண்ணுக்குள் கேள்வி பலவாய்த்; தொடுத்திட
என்னுக்குள் வந்ததை ஏட்டில் எழுதினேன்!
முல்லைக் கொடியாள்! நிலவின் நிறமுடையாள்!
பிள்ளை மொழியாள்! பெருந்தமிழ்ப் பண்புடையாள்!
இல்லம் தனிலே உனைத்தேடி என்றென்றும்
உள்ளம் அழுவாள்! உருகித் தவிப்பாள்!
இதையேன் மறந்தாய்..நீ? எப்படிப் போனாய்?
அதையே நினைப்பவளுக்(கு) ஆறுதல் ஏது?
புதைக்குள் படுத்தாய்! புலம்பியே நெஞ்சம்
பதைப்பதைப் பாரும்! பறந்தாயே சொல்லாமல்!
யார்சொல்வார் ஆறுதல்? என்னவென்று சொல்வதோ?
ஊர்க்கூடி நின்றாலும் உன்னிகர் ஆகுமா?
கம்பன் கழகம் கவலையில் ஆழ்ந்தது!
நண்பன் இழப்பால் நகுதல் இழந்தது!
புன்னகை பூமுகம் மண்ணில் புதைந்திட
அன்னியம் ஆனதே! ஐயகோ.. என்னயிது?
கண்ணியம் மிக்க கலைஞர்கள் சேர்ந்த..நல்
புண்ணியம் மிக்க தமிழ்ச்;சேவை! உன்தன்
உழைப்பால் உயர்ந்ததை ஊர்பார்த்து மெச்சத்
தழைத்து நிழல்தரும் வேளையில் சற்றுநேரம்
நில்லாமல் போனதேன்? நீபோனாய்! நிம்மதியும்
இல்லாமல் போனதையா இங்கு!
11.12.2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக