திங்கள், 14 பிப்ரவரி, 2011

எண்ணப் பரிமாற்றம் - திருமதி சிமோன்

வணக்கம்.  கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டிருந்த போதிலும், அவை பொதுவான, எல்லோரும் பகிர்ந்து கொள்ளக்கூடியனவாக இருந்தனவேயன்றி, தனிப்பட்ட உணர்வுகளைப் பற்றியதாய் இருந்ததில்லை!

     இன்று, என் மேல் விழுந்த பேரிடியின் தாக்கம் என்னையறிந்த எல்லோரையுமே அதிர்ச்சியுறச் செய்ததன் விளைவு, பொதுவாழ்வில் எவ்வளவுதான் ஈடுபட்டிருந்த போதிலும், தனித்து - கொண்டிருந்த வாழ்க்கை வட்டத்தை விட்டு வெளிவந்து “நான்”, “எனது” நிலை பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்திற்காளாக்கி விட்டது.

     சிந்தித்துப் பார்த்தால், இதுகூட என் தனிப்பட்ட நிலை மட்டுமேயல்ல! உலகின் கோடானுகோடி துணை இழந்து துயருக்காளானவர்களின் நிலை! இன்னும் சொல்லப்போனால், இருவர் இணையும் நாளன்றே காலத்தாலோ, இயற்கையாலோ அன்றி இறைவனாலோ நிர்ணயிக்கப்பட்ட, உறவை வெட்டுகின்ற கொடுமை படைத்த நிலை! -  “டைம் பாம்”. “கண்ணி வெடி”. - என்று, எப்போது வெடிக்கும் என்று அறியாமலே, உணராமலே, ஒரு நாள் நிச்சயம் வெடிக்கும் என்ற பொது விதியை மீறிய நம்பிக்கையில், வாழ்வின் சுவையை அனுபவிக்கும் மனித பலவீனமே வாழ்வாகக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு அற்பக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அது வெடித்த பிறகோ .....

     எஞ்சியுள்ளவரின் வாழ்க்கை, சாரமற்றதாகி விடுகிறது. நிவர்த்திக்க இயலாத வகையில் ஊனமாகி விடுகிறது. விடுதலை ஒன்றே பாலைவனச் சோலையாகத் தோன்றினாலும் அதுவும் கானல் நீராக அலைக்கழிக்கிறது.

     ஆனால் மனிதப் பண்பின் உயர்வை உணர இது போன்ற தருணம் வழிவகுக்கிறது. பழக்கத்தாலும், நட்பாலும், உறவாலும், பாசத்தாலும் சிதறிப் போன உள்ளத்தை ஒட்டவைக்க பிறர் மேற்கொள்ளும் முயற்சிகள் நெகிழ வைக்கின்றன! அந்த வகையில் நான் கம்பன் கழகத்திற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

     “பொதுச் செயலர்” எனினும் என் கணவருக்காக “நினைவேந்தல்” நிகழ்த்தி, கவிதாஞ்சலி படைத்து, மலர்களால் நிறைத்து, இதழும், வலைப்பதிவும் வெளியிட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக, நெஞ்சை விட்டு நீங்கா நினைவை நிழலுருவாய் எனக்களித்துத் துணையிருக்க வைத்த திரு பாரதிதாசன் அவர்கள் அன்புக்கு, என் கண்களில் ஊறும் நீரே நன்றி நவிலத்தக்கது. என்னை வென்ற அந்த “கண நேரப் பார்வையை”  நிரந்தரமாக்கித் தந்த திரு சிவக்குமார் அவர்களுக்கு என்றும் என் நன்றி உரித்தானது.

     இனி...? என்னவென்று, எதையென்று நான் சொல்வது!  பனி மூட்டம் கவிந்திருக்கையில் பாதை புரியாததில் வியப்பில்லை! எனவே “நாளை” என்பதை விடுத்து இன்றைய என் நடப்பை, நாளைய என் கணிப்பைப்புரிய வைக்க முயல்கிறேன் -

வான்வெளியை வெறிக்கின்றேன்!
   வண்ணமிலாப் பாழ்வெளியாய்
       வனப்பு குன்றித்,
தேன்நிலவாய்த் தினமிருந்த
     தெவிட்டாத வாழ்வதனைத்
        துடைத்து விட்டே,
ஊன்உருக்கும் உயிர்மூச்சை
     உள்வாங்கி நடைப்பிணமாய்
         உலவச் செய்தே,
ஏன்என்ற கேள்விதனை
     எதிர்கொள்ள இயலாமல்
          இறுக்கம் கொள்ளும்!

மலர்ச்சோலை மணம்பரப்பும்!
     மனங்கண்ட உறவினிலே
          மகிழ்வு பொங்கும்;
இலதாகி, நகையதனை
      இழந்தேகி, இல்லமதும்
           இனிதே காணா
உலவாத உன்னினைவை
       உள்ளமதில் உருபதித்து
            உணர்த்தும் ஊனம்!
வலம்வருமோ வடிவேந்தி
        வற்றாத நதியெனவே
             வாட்டம் போக்க!

மனதினிலே மாற்றமதை
   மலரவைக்கும், அழுத்துகின்ற
      மாறாத் துன்பம்
கனவெனவே மறைந்துவிடும்
   கருத்திலென வலியநின்று
       காணும் காட்சி,
இனமறியாத் துயரமதை
    இதயமதில் நிரப்பிவிட்டு
        எனையே ஏய்க்கும்!
கணத்தினிலே ஒலிக்கின்ற
    கண்மயக்கும் இசையாவும்
        கான லாகும்!

சித்தமதில் இதமளித்துச்
   சித்திரமாய் வட்டமிட்ட
     சிறப்பு யாவும்
மொத்தமாகத் தானிழந்த
  மொழியதனை நுாலேந்தி
     வாழ்வில் என்றும்
சொத்தாக விளங்கிநின்ற
  செல்வத்தைப் பறிகொடுத்துச்,
     சொல்லும் அன்பும்
இத்தரையில் பொதிந்தவரி
   இனித்தொடராச் சோகமதை
      இன்றும் கூறும்!

பொழுதைக்கொன் றுவிடநானும்
  போராடி நாளெல்லாம்
      போதும் தோற்றும்,
எழுவதாய் நடத்துகின்ற
  ஏக்கமிகு நாடகத்தை
     இனியும் இங்கே
பழுதிலாது நடித்திடவே
  பாழுலகு துணைசெய்யும்
     பரிவு காட்டி !
முழுமையுறா வாழ்வதான
  முயற்சியொன்றே இனித்தொடர,
      மிஞ்சும் வாழ்வே!

                               திருமதி சிமோன்
செவ்வாய், 14 டிசம்பர், 2010

Biographie du Chevalier Simon Hubert

Simon Hubert, né le 11-04-1944 à Karaikal, est le 5ème des sept enfants des époux Adaikalassamy-Coujandaïyammal.

Recruté sur concours dans l’Etat de Pondichéry, il est instituteur de l’instruction publique, du 1er octobre 1962 au 31 janvier 1964

Mis en route par le consulat général de France à Pondichéry, embarqué à Bombay le 14 mars 1964 et débarqué à Marseille deux semaines plus tard, engagé volontaire pour compter du 1er avril 1964, il rejoint l’école militaire d’infanterie à Montpellier en qualité d’élève sous-officier d’active de la 37ème promotion. Obtenant le certificat d’arme numéro 2, le certificat interarmes puis la qualification de chef de commando à l’issue des épreuves, il est nommé au grade de sergent le 1er avril 1965.

A cette même date, il est affecté au 150ème régiment d’infanterie motorisé à Verdun où les fonctions de comptable adjoint de la 5ème compagnie lui sont confiées. Sa grande valeur professionnelle ayant été remarquée, il est désigné d’emblée, malgré son jeune âge, pour occuper les fonctions de chef comptable de la 3ème compagnie.

Sportif, très discipliné et extrêmement sérieux, il est un excellent chef comptable en qui ses chefs ont une entière confiance.

Le 1er juillet 1967, le brevet du premier degré, spécialité « comptable de corps de troupe » lui est délivré et il est déclaré titulaire du brevet de chef de section à compter de la même date.

Il est promu au grade de sergent-chef le 1er janvier 1969.

D’une intelligence vive et possédant de très solides connaissances techniques, il obtient brillamment le brevet du deuxième degré de comptable de corps de troupe le 1er novembre 1969.

Il est admis dans le corps des sous-officiers de carrière à compter du 1er février 1970.

Sa très grande compétence et sa haute conscience professionnelle le désignent tout naturellement pour assurer la gérance du cercle-mess des sous-officiers, dont la situation était des plus précaires. Possédant le goût de l’action, imaginatif, doué d’un sens aigu de la rentabilité et cherchant en permanence à améliorer la qualité des services, il démontre en tous points qu’il est un gestionnaire exemplaire.

Il est promu au grade d’adjudant le 1er janvier 1971.

Hautement qualifié, il se voit confier le poste d’adjoint au chef du bureau « Effectifs-Mobilisation ». Excellent sous-officier, il est un subordonné de tout premier plan. Très méthodique et compétent, il allie agréablement rendement et organisation.

En août 1973, il est affecté au 24ème groupe de chasseurs, à Tübingen, Allemagne. Désigné pour occuper les fonctions d’officier comptable, fonctions pour lesquels il n’était absolument pas préparé, il s’est d’emblée imposé à ce poste difficile grâce à un travail soutenu, un sens affirmé de l’organisation et un esprit méthodique. Les remarquables résultats obtenus lors de la revue inopinée du détachement d’inspection technique lui valent une lettre de félicitations.

Manifestant le souci constant d’améliorer ses connaissances, il obtient le brevet militaire professionnel du deuxième degré, spécialité « chancelier, à compter du 1er juin 1974.

Promu au grade d’adjudant-chef le 1er novembre 1976, il se voit logiquement confier les fonctions de chancelier du corps.

Assimilant très rapidement les différents aspects très techniques de sa mission, d’un jugement sûr et d’une discrétion absolue, il obtient en tous points des résultats remarquables.

Collaborateur avisé et écouté du chef de corps, il est un sous-officier de très grand choix pour le commandement et ses pairs ; son action est particulièrement bénéfique vis-à-vis des sous-officiers pour lesquels il est un conseiller précieux et un exemple permanent, notamment pour les jeunes cadres.

L’excellent des services rendus lui valent alors une seconde lettre de félicitations.

Le 1er janvier 1980, il est déclaré titulaire du diplôme de qualification supérieure.

La qualité de ses dispositions intellectuelles et de ses connaissances étant reconnue et sanctionnée par une brillante réussite au concours des majors - 1er en Allemagne, 2nd en France – il est nommé au grade de major le 1er février 1980.

En août 1982, il est affecté à Strasbourg, à l’Etat-major de la 6ème division blindée et 62ème division militaire territoriale devenue, en 1984, 62ème division militaire territoriale et division du Rhin. Adjoint au chef de bureau chancellerie, il se donne à fond et avec énergie à son nouvel emploi. Travailleur acharné, méthodique et parfaitement organisé, il se montre aussitôt très efficace.

Intelligent, d’esprit très militaire, de caractère affable et faisant preuve en toutes circonstances d’une grande courtoisie, il est très apprécié des sous-officiers chanceliers des corps qu’il contrôle et conseille utilement.

Om reçoit en 1985 puis en 1990 la Médaille de la Défense Nationale puis la prestigieuse Médaille Militaire.

Le 2 août 1993, il est muté à l’Etat-major du Commandement Militaire  de l’Ile de France. Affecté au bureau Réserve, en qualité de chef de la cellule « Notation – Avancement des officiers de réserve », il s’impose d’emblée grâce à son efficacité et à ses connaissances approfondies dans le domaine de la chancellerie.

En mars 1995, il est désigné responsable de la création de la cellule « Engagement Spéciale dans la Réserve ». D’une grande vivacité d’esprit et rigoureux dans l’analyse des problèmes, il obtient, par une forte implication personnelle, des résultats dignes d’éloges.

Le 4 aout 1997, il rejoint la Direction des services financiers au Ministère de la Défense, en qualité de chef de la section chancellerie. Spécialiste de tout premier ordre, doté d’une vaste expérience dans le domaine technique de la chancellerie et dans la gestion des ressources humaines, c’est un collaborateur de tout premier choix, qui a su s’adapter à un environnement nouveau pou lui et prendre en compte l’aspect interarmées de la Direction.

D’une parfaite éducation, sympathique et attachant, soucieux du facteur humain, il a une haute conception de son métier et un sens aigu de ses responsabilités.

Sous-officier possédant un remarquable ensemble de qualités professionnelles, intellectuelles, morales et humaines, le Major SIMON est nommé au grade de chevalier de l’Ordre National du Mérite après trente-six années de service.

Il a mené une vie pleine d’amour, d’amitié, du sentiment de devoir, de l’amour de la langue et du peuple tamouls. Il était grand et avait un cœur d’or.

Il a épousé Rajeswari, une femme d’amour et de talent. Elle a été à ses côtés tout au long de sa vie. Elle suivait le chemin de Mahakavi Barathiyar, chantre du féminisme.

Il est le père de deux enfants Anand et Vasanthi. Il s’est sacrifié pour leur bonheur. Il leur a permis de faire des études supérieures. Il a eu deux petits enfants Asassou et Raja.

Il a travaillé pendant quelque temps comme Président de l’association des co-propriétaires.

Il s’est mis au service de l’association qui assurait l’instruction gratuite et fournissait des vêtements à l’école située à Ennayam au Kérala.

En tant que Secrétaire général de l’association catholique Gnanagam, il a rendu beaucoup de services et avait acquis la reconnaissance des gens.

Dans la chorale de Pontoise, il avait trouvé son bonheur en étant au service de la musique et de Dieu.

Il s’est entièrement consacré à Gnanathipam de Gnanagam comme son responsable de publication.

Jusqu’au bout, il s’est investi pour aider les gens, les accompagner en leur prodiguant les valeurs morales et assurer les rites funéraires des catholiques décédés.

Secrétaire général de France Kambane Kajagam, il a beaucoup œuvré pour la langue et le peuple tamouls.

Responsable de publication du magazine Kambane, il a défendu le merveilleux Tamoul comme la prunelle de ses yeux.
திங்கள், 13 டிசம்பர், 2010

திருமதி. சிமோன் இராசேசுவரி

வாழ்க்கைச் சோகம்
 

மலரின் இதழ்கள் வாடி உதிர்வதும்
நிலவின் முழுமை நிலை குலைவதும்
முகிலின் உருவம் முற்றும் மறைவதும்
அகிலின் மணமும் அகன்று தேய்வதும்
பனித்துளி அழகு பனித்துடன் காய்வதும்
இனிப்பெனும் சுவையும் இனிமை குறைவதும்
வண்ணக் கனவு விடியலில் மறப்பதும்
எண்ணச் சிதறல் எளிதில் மாய்வதும்
என்னைத் துறந்து..நீ எங்கோ சென்றதும்
உன்னை மறவா(து) உள்ளம் துடிப்பதும்
இன்றும் தொடரும் ஏழையென் சோகம்!
என்றும் வாட்டும் இன்னுயிர் ஓட்டம்!
தன்னுயிர் இழக்கத் தனிவழி உளதோ?
என்மனம் அறிந்து இணைப்பார் இலையே!
முந்தைய நாளினில் முன்வந்து அணைத்த..நீ
சிந்தை மகிழ்ந்திடச் சீர்வழி கண்டே
உனதரும் பாவையை உனக்கென மீண்டும்
தனதாய்க் கொள்வாய் தரணியில் இருந்தே!


உன் ராஜி